புதுக்குடியிருப்பு வெடிபொருட்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வீட்டு காணி ஒன்றினை துப்பரவு செய்த வேளை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.
02.10.2020 அன்று இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினை தொடர்ந்து குறித்த காணியின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த இடத்தில் உள்ள வெடிபொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது ஆர்.பி.ஜி எறிகணைகள் 16, 81 எம்.எம் மோட்டருக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பிசுற்றுக்கள் 14, 81 எம்.எம் மோட்டார் பரா 01,வெடிப்பிகள் 07 உள்ளிட்ட வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.இந்த வெடிபொருட்கள் 03.10.2020  நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவை சிறப்பு அதிரடிப்படையினரால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள