புன்னகை அரசன்

புன்னகை அரசன்

பூவிதழ் மலரும் அழகு இவன்
புன்னகைக்கு ஏது நிகரு!
நாவிதழ் புலரும் அழகு அந்த
சூரியனுக்கே இவன் உயிரு!

போரியல் பள்ளியில் தீப்பிழம்பு!
அரசியல் ஆளுமையில் நீரோடை!
யாருக்கும் அடிபணியா வீரியம்!
வேருக்கு நீர்பாய்ச்சும் தைரியம்!

வேதனையை விரட்டிய வேலனின் தம்பி!
சாதனையை நிகழ்திய தலைவனின்
தளபதி!
நீசர்களை துவம்சம் செய்த செயல்வீரன்!
பேசிப்பேசியே உரிமைக்காக ஓயாது
போராடியவன்!

சமாதானப்புறாவாக சிறகசைத்தவன்!
சமரசம் செய்யாது சர்வதேசத்தில்
கொள்கையை வென்றவன்!
ஊன்றுகோலோடு உலகமெல்லாம்
உரிமைக்காய் உறுமியவன்!
இடக்கு கொண்ட மாந்தரிடம்
இறுக்கமாய் நின்றவர்!
அடக்கு முறையை அடியோடு
வெறுத்தவர்!

எம்மை எரிக்க வந்த எரிக்கருக்கு
தன் புன்சிரிப்பால் மண்ணின் மாண்பு
புகட்டியவர்!
அண்ணனின் ஆணைக்கு அமைய
வெறுமையின் கைகுலுக்கலிலும்
வெறும் வயிற்றோடு அனுப்பாது
நோர்வேக்காரருக்கு நூடில்சும்
இறால் நண்டுக்கறியும் மரைவத்தலும்
வாய்க்கு ருசியாய் ஆக்கி
விருந்து வைத்து அனுப்பியவர்!

அதனால்த்தான்
என்னவோ
உலகத்தால் தடைசெய்யப்பட்ட
குண்டுகளால் எங்கள் குலவிளக்குகள்
மாண்டுபோய் துடிக்க
வகை வகையாய்
உண்ட மயக்கத்தில்
உலகம் ஊமையாய்
கிடந்தது!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!