புன்னாலைக்கட்டுவனில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Default_featured_image

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். 56 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 1.56 கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை தனது உடமையில் வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபர் கைதானார். குறித்த நபர் விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் வைத்து சிறு பொதிகளை உருவாக்கிய பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

வயதானவர் 24 வயதுடைய புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments