புயலின் தாக்கத்தால் இந்தோனேசியா, தாய்லாந்தில் 563 பேர் உயிரிழப்பு!

You are currently viewing புயலின் தாக்கத்தால் இந்தோனேசியா, தாய்லாந்தில் 563 பேர் உயிரிழப்பு!

சென்​யார் புயல் காரண​மாக இந்​தோ​னேசி​யா​வில் 300 பேரும், தாய்லாந்​தில் 263 பேருமாக இரு நாடு​களி​லும் இது​வரை 563 பேர் உயிரிழந்துள்​ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலாக்கா நீரிணைப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகுதி சென்​யார் புய​லாக வலுப்​பெற்று இந்தோ​னேசி​யா​வின் வடக்கு சுமத்ரா பகு​தி​யில் கரையைக் கடந்​தது.

இதன்​ காரண​மாக அங்கு கனமழை பெய்​து, பல்​வேறு இடங்​களில் பாரிய வௌ்ளமும் மண்சரிவும் ஏற்​பட்​டது.

அதன் விளைவாக வடக்கு சுமத்​ரா, மேற்கு சுமத்​ரா, அச்சே மாகாணங்களில் இது​வரை 300 பேர் உயி​ரிழந்துள்​ளனர். 620 பேர் படுகா​யம் அடைந்​துள்​ளனர்.

வெள்​ளம், மண்சரிவு ஏற்​பட்ட பகுதிகளில் 290 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்டுள்​ளனர். சுமார் 3.11 பில்​லியன் டொலர் பொருட்சேதமும் ஏற்​பட்​டிருக்​கிறது.

புய​லால் பாதிக்​கப்​பட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஏற்பட பல வாரங்​களாகுமென தெரிவிக்கப்படுகிறது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply