புருடா விடும் இனப்படுகொலையாளி சரத்பொன்சேகா!!

புருடா விடும் இனப்படுகொலையாளி சரத்பொன்சேகா!!

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.

அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இறுதி கட்ட யுத்தம் நடந்த காலகட்டத்தில் சுமார் 5,000 – 6,000 வரையிலான பொதுமக்களே உயிரிழந்திருக்கக்கூடும் என கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில், பொதுமக்கள் முன்நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவ்வாறான சூழலிலேயே பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று் அவர் குறிப்பிட்டார்.

பதுங்கு குழிகளில் கேடயமாக நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களை தாம் காப்பாற்றியதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.

இதன்படி, இறுதிக் கட்ட யுத்தம் நடந்தபோது இரு தினங்களில் மாத்திரம், இலங்கை ராணுவம் சுமார் 2,70,000 பொதுமக்களை காப்பாற்றியதாக அவர் விளக்கம் அளித்தார். அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 50,000 பேர் விடுதலைப்புலிகளிடமிருந்து காட்டு வழியாக தப்பி வந்தவர்கள் என்றும் ஃபொன்சேகா கூறினார்.

எஞ்சிய மக்களை யுத்தத்தின் மூலம் தாம் காப்பாற்றியதாகவும் சரத் பொன்சேனா தெரிவித்தார்.

இதேவேளை

எமது மக்களை லட்சக்கணக்கில் இனவழிப்பு செய்துவிட்டு இன்னும் பச்சை பொய் சொல்லிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையாளியின் கருத்து கண்டனத்துக்குரியது.

பகிர்ந்துகொள்ள