புலிகளின் வரலாறு தெரியாமல் வெட்கமில்லமால் பிதற்றும் சுமந்திரன்!

You are currently viewing புலிகளின் வரலாறு தெரியாமல் வெட்கமில்லமால் பிதற்றும் சுமந்திரன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுமந்திரன்  இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம். வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

 குறித்த  வரலாற்று முழுமையில்லாத   திரிபுகளை சுமந்திரன்  காழ்புணர்வுகளால்  கக்குவதாகவே அமைகிறது.

யாழ்முஸ்லீம்கள் குற்றமற்றவர்கள், புலிகள்தான் வெறிபிடித்து அவர்களைக் கலைத்தார்கள் என்பது போல்  தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலுள்ள காழ்புணர்வுகளை மட்டும் கக்குவது அபத்தமானது.   புலிகள் இனச்சுத்திகரிப்பைச் செய்திருக்க விரும்பினால் அவர்களுக்கு 24மணித்தியாலம் தேவையில்லை  இது  ஒரு பொது மகனுக்கும் தெரியும் , சுமந்திரனுக்கு தெரியவில்லை என்றால்  அவரின் அரசில் லோபி  தமிழர் பக்கமிருந்து உறவாடி கெடுக்கும் ஒரு  அரசியல் லோபியாகவே அமைகிறது யாழில்  இஸ்லாமியரை அழிப்பது புலிகளின் நோக்கமில்லை  பாதுகாப்புக்கருதி அவர்களை வெளியேற்றினார்கள் என்பதே உண்மை. கடந்த கால வரலாற்றை ஆராய்ச்சி செய்து பார்த்தால்  கடந்த காலத்தில்  அரசின் ஒட்டுக்குழுவாக  இயங்கிய ஜீகாத் குழுவின் உண்மை முகம் தெரிய வரும் . 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments