புலிகள் மீதான தடை நீக்கப்படக்கூடாது -இந்தியா வலியுறுத்தல்!

புலிகள் மீதான தடை நீக்கப்படக்கூடாது -இந்தியா வலியுறுத்தல்!

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலிகளை நீக்கக்கூடாது அந்த அமைப்பு மீதான தடையினை தொடரவேண்டும் என பிரித்தானியாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரையும் பிரிட்டன் சேர்த்துக் கொண்டது.

இந் நிலையில் இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதனால் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரப்பட்டது.

இந்நிலையில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என கோரியுள்ளது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தொடர்பிருப்பதை இந்தியா சுட்டிக்காட்டியே தடையை நீக்க வேண்டாம் என கோரியுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments