பிரான்சில் புளோமெனில் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியில் நினைவேந்தல்!

பிரான்சில் புளோமெனில் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியில்  நினைவேந்தல்!


புளோமெனில் தமிழ்சங்கங்கள், புளோமெனில் வாழ் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து
தற்போதுள்ள காலச்சூழ்நிலையிலும் நகர பிதாவின் அனுமதியுடன் இனவழிப்பு நினைவுத்தூபியில் இன்றைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


பொதுச்சுடரினை புளோமெனில் தமிழ்சங்கத்தின் தலைவர் திரு. செல்லத்துரை கணேஷநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார்.ஈகச்சுடரினை . 16/07/1991 அன்று கட்டைக்காடு வெற்றிலைக்கேணியில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத்தழுவிக்கொண்ட
2 -ம் லெப்டினட் மௌலி ,05/04/2009 அன்று ஆனந்தபுரப்பகுதியல் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரன் எல்லாளன்ஆகிய இருமாவீரர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்தார் .

அதனை தொடர்ந்து தமிழீழ மண்மீட்ப்பு போரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீர்களுக்கும் இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்ப்பட்ட பொதுமக்களுக்காகவும் இனவழிப்பில் கொல்லப்பட்ட எம்முறவுகளுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நினைவுத்தூபிக்கு முள்ளிவாய்க்காலில் தனது தந்தையை இழந்த பரராசசிங்கம் கீரன் அவர்களால் மலர்வணக்கம் செய்யப்பட்டது.நகரசபை உறுப்பினர்,புளோமெனில் தமிழ்சங்கங்கள், தமிழ் தேசிய கட்டமைப்புகளின் பிரதிநிதிகள்,புளோமெனில் வாழ் தமிழ் மக்கள், என நிகழ்வில் கலந்து கொண்டு மாவீர கண்மணிகளும் எம்முறவுகளுக்கும் சுடரேற்றி மலரஞ்சலி செய்தார்கள்.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள் ,நகரசபை உறுப்பினர் திரு. கிங்ஸ்ரன்,மற்றும் புளோமெனில் தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகளின் உரைகளும் இடம் பெற்றது.
இனத்தின் விடுதலை நோக்கிய பணிக்காய் அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம் .

நகரசபை உறுப்பினர் திரு. கிங்ஸ்ரன் ஞானநாயகம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.

புளோமெனில் வாழ் தமிழ் மக்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments