பூசகர் மீது ரவுடிகள் தாக்குதல்!

பூசகர் மீது ரவுடிகள் தாக்குதல்!

திருவிழா ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் பூசகர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில் காயமடைந்த பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய குருவான சுந்தரராஜா குருக்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புனர்நிர்மான பாலஸ்தானம் செய்யப்பட்டு இன்றையதினம் திருவிழா இடம்பெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக பூஜை வழிபாடுகள் குறைவடைந்து இருந்தது. 

இவ் ஆலய பூசகருக்கும் பரிபாலன சபையினருக்கும் இடையில் ஆலயம் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு ஆலய குருவிற்கு சார்பாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. 

இன்று திருவிழா வெகு விமர்சியாக இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments