பூட்டிய வீட்டுக்குள் இளைஞரின் சடலம் மீட்பு!

You are currently viewing பூட்டிய வீட்டுக்குள் இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 30 வயதுடைய இளைஞர் ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வவுனியா காத்தார் சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தினை காவல்துறையினர் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.
குறித்த வீடொன்றிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் ஏற்பட்டதால் அயலவர்கள் ஒன்று கூடி பின்னர் காவல்துறையினருக்கு தகவலை அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் சாளரம் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் கிராமமக்கள் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள