பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீயில் எரிந்த பெண் உயிரிழப்பு!

பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீயில் எரிந்த பெண் உயிரிழப்பு!

சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த (வயது 28) இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வசித்த குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 5 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண் கணவனின் சித்திரவதையை தாங்காது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தீக்காயத்திற்குள்ளான பெண்ணை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments