பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்க்கான அனைத்து விமான போக்கு வரத்துக்களும் ரத்து : SAS

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்க்கான அனைத்து விமான போக்கு வரத்துக்களும் ரத்து : SAS

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் செல்லும் அனைத்து விமானங்களையும் SAS ரத்து செய்கின்றது என்று SAS தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஹாங்காங்கிற்கான விமானசேவை வழமைபோன்று நடைபெறும் என்றும் ‘எங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படும்’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

பிப்ரவரி 9 ஆம் திகதி வரையிலான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவதுடன், பிப்ரவரி 29 வரை முன்பதிவுகளும் மூடப்படும் என்றும் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கிற்கான புதிய முன்பதிவுகளுக்காக சேவையும் மூடப்பட்டுள்ளது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: Dagens Næringsliv)

அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ், எகிப்து ஏர் மற்றும் இந்தோனேசிய லயன் ஏர் ஆகிய நிறுவனங்களும் சீனாவுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments