பெற்றோரின் அக்கறையின்மை 3அகவை பாலகன் பலி!

பெற்றோரின் அக்கறையின்மை 3அகவை பாலகன் பலி!

யாழ்.பருத்துறை- அல்வாய் பகுதியில் வீட்டில் கதிரையில் இருந்து விழுந்த சிறுவன் தொடர்பாக பெற்றோர் கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். 

ஜெபநேசன் சியோன் (வயது3) என்ற சிறுவன் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளான்இதனை பெற்றோர் பொிதுபடுத்தாத நிலையில், நேற்றய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன் சிறுவனுக்கு காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் பெற்றோர் நேற்று மதியம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிறுவனை சேர்த்தனர்.அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments