பெல்ஜியத்தில் கொரோனாவிற்கு தமிழ் பாடசாலை நிர்வாகி இளம் குடும்பஸ்தர் பலி!

பெல்ஜியத்தில் கொரோனாவிற்கு தமிழ் பாடசாலை நிர்வாகி இளம் குடும்பஸ்தர் பலி!

பெல்ஜியம் நாட்டில் கொரோனா காரணமாக யாழ்.மயிலிட்டியை சேர்ந்த சுப்பையா பிரதீப் (வயது 40) என்ற இளம் குடும்பஸ்தர் இன்று (12.05.2020) செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.

அன்னார் வினுசாவின் ஆருயிர் கணவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

65 நாட்களாக கொரோனாவின் பிடியில் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் இருந்துள்ள நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் அயராது சேவையாற்றியவர் என பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றி பின்னர் அறியத்தரப்படும்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments