அமெரிக்கா, ஈரானின் தெற்கு பகுதிகளில் ஏவுகணை தளங்கள் மற்றும் ஹோர்முஸ் பகுதியில் ஈரானிய கடற்படை படகுகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இது “தற்காப்பு நடவடிக்கை” என அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த தாக்குதல், அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் ஒருபக்க சார்பாக நடந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான், இந்த தாக்குதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம்சாட்டி, பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் விளைவாக உலக எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது; ஹோர்முஸ் கடல்வழிப்பாதையில் பகுதியில் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.
அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியமையானது, சமாதான முயற்சிகளை குழப்பும் அமெரிக்காவின் செயலாகவே கருத முடியுமென சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டாரில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நேரத்தில் அமெரிக்க நடத்திய இந்த வலிந்த தாக்குதல், பேச்சுவார்த்தைகளின் நம்பிக்கைத்தன்மையை நம்பிக்கை குறைந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
இதேநேரம், சர்வதேச அளவில் எழுந்துள்ள கருத்துகளின்படி, பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்தில் அமெரிக்கா இராணுவ தாக்குதல் நடத்தியிருப்பது சமாதான சூழலை பலவீனப்படுத்தும் என் எச்சரிக்கப்படுகிறது.






