பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் இலங்கை மந்திரி!

You are currently viewing பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் இலங்கை மந்திரி!

இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) இந்தியா வருகை தர உள்ளார். இந்தியாவிற்கு இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. எனினும் அவரது பயண அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் இலங்கை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை கடனாக கோரியுள்ள நிலையில், அந்த நாட்டு நிதி மந்திரியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments