பேரன் இறந்த செய்தியறிந்து வயோதிப பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு!

பேரன் இறந்த செய்தியறிந்து வயோதிப பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு!

பேரன் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70  வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அம்மம்மா பேரனுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்

இந்த தகவலை அறிந்த அம்மம்மா  அதிர்ச்சியில் மயங்கிய நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். 

சடலங்கள் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments