பொதுமக்களிடையே தோன்றிய விளாடிமிர் புடின்!

You are currently viewing பொதுமக்களிடையே தோன்றிய விளாடிமிர் புடின்!

7 மாதகால தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொதுமக்களிடையே தோன்றினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தென்கிழக்கு ஆசியத் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த உள்ளார். இது கசான் நகரில் நடைபெற உள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக அங்கு சென்றிருந்தார்.

அங்குள்ள மக்களுடன் அவர் உரையாடினார். அவர்களில் ஒரு குழுவினரை அணுகிய புடின் நகைச்சுவையாக பேசினார்.

அவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நானும் மாஸ்கோவைச் சேர்ந்தவன்தான்” என்று கூறினார். இதுதொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

கிரெம்ளின் மீதான பொதுமக்களின் ஆதரவு குறைந்து வருவதாகக் கூறப்படும் சூழலில் புடினின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் சாதாரண மக்களுடன் விளாடிமிர் புடின் தன்னிச்சையாக உரையாடும் சூழலில் அரிதாகவே காணப்படுகிறார்.

கடந்த ஏழு மாதங்களில் ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு புடின் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply