பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார்.

விடுதியில் நின்ற பார்த்தீபனின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .

இது தொடர்பில் பொத்துவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments