பொலிகண்டி பகுதியில் 220 கிலோகிராம் கஞ்சா மீட்பு!!

You are currently viewing பொலிகண்டி பகுதியில் 220 கிலோகிராம் கஞ்சா மீட்பு!!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இராணுவ புலனாய்வு துறை மற்றும் சிறப்பு அதிரடி படை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (15) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோகிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையும், சிறப்பு அதிரடி படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 220 கிலோகிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு  இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடி படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply