பொலிஸாரை டிப்பரால் மோதி கொன்றுவிட்டு சாரதி தப்பியோட்டம்!

பொலிஸாரை டிப்பரால் மோதி கொன்றுவிட்டு சாரதி தப்பியோட்டம்!

நேற்று நள்ளிரவு குருநாகல், கோபிகானே பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை விசாரிக்க சென்ற பொலிஸார் ஒருவரை டிப்பரால் மோதிவிட்டு மணல் கடத்தல் கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹானா, தெரிவிக்கையில், ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு, தேதுரு-ஓயாவிலிருந்து மணல் ஏற்றிவந்த ஒரு டிப்பர் நிறுத்த முயன்றது, ஆனால் மணல் கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாது பொலிஸார் ஒருவரைமோதிவிட்டு மணல் கடத்தல் கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

காயமடைந்த பொலிஸார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரஸ்நாயக்கபுராவைச் சேர்ந்த 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஆவர்.

டிப்பர் சாரதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கும், சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இரண்டு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹானா தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள