போதைபொருள் வியாபாரிகள் வடமராட்சியில் கைது?

போதைபொருள் வியாபாரிகள் வடமராட்சியில் கைது?

நேற்று வெள்ளிக்கிழமை வடமராட்சியின் அல்வாய் பகுதியில் வைத்து  ஹெரோயினுடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான முதலாவது சந்தேக நபர் இதுவரை காலமும் பொலிசாருக்கு தப்பித்து பலரை போதைபொருள் வியாபாரத்தின் ஈடுபடுத்தியவர் என தெரியவந்துள்ளது.

இளவாலை சேந்தன்குளம் பகுதியை சேர்ந்த இவர் வயது 34 வயதுடையவரென தெரியவந்துள்ளது.
இதனிடையே இரண்டாவது நபர் கொழும்பைச் சேர்ந்தவர் (வயது 55) எனவும்  மூன்றாவது நபர் 41 வயது அல்வாய் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.
இந்த மூவரும்  வடமராட்சிப் பகுதியிலே போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 


இவர்களை பிடிப்பதற்காக யாழ் மாவட்டத்தில் உள்ள போலீசார் வலை விரித்து திரிந்தார்கள் என தெரியவருகின்றது. முதலாவது நபர் போலீசாரின் வலையில் சிக்காமல் தப்பித்துக் இருந்து வந்தார். நெல்லியடி பொலிசாரின் தீவிர முயற்சியினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்கள் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments