போயிங் விமான எரிபொருள் தொட்டிகளில் உலோக குப்பைகள்!

போயிங் விமான எரிபொருள் தொட்டிகளில்  உலோக குப்பைகள்!

737 MAX ஜெட் விமானங்களை தொடர்ந்து பரிசோதித்ததில், அதன் எரிபொருள் தொட்டிகளில் குப்பைகள், கருவிகள், உலோக பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் எச்சங்களை கண்டுபிடித்ததாக ராய்ட்டர்ஸ் (REUTERS) தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் மேலும் கூறுகையில், கிடைக்கப்பெற்ற ஒரு உள் குறிப்பின்படி, இது விமானத்தின் உற்பத்தியில் பங்கேற்ற தொழிலாளர்களால் விட்டுச்செல்லப்பட்ட பொருட்கள்/கழிவுகள் என்றும், அவை கண்டுபிடிக்கப்படாவிட்டால் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் கூறுயுள்ளது.

அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 இல் 737 MAX விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து 346 பேர் உயிர் இழந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

பகிர்ந்துகொள்ள