போராட்டத்திற்கு யாழில் விலகியது தடை!

போராட்டத்திற்கு யாழில் விலகியது தடை!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்திற்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

காவல்த்துறையின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நீக்கியது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்த்துறையினர் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை தடை உத்தரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தினை மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள்
தடை விதிக்க கோரி சுன்னாகம் காவல்த்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்தினை நீதவான் நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள