போரா, சமாதானமா? முடிவெடுக்க வேண்டிய நிலையில் டிரம்ப்!

You are currently viewing போரா, சமாதானமா? முடிவெடுக்க வேண்டிய நிலையில் டிரம்ப்!
ஈரான் தொடர்பாக போரை தொடர்வதா அல்லது சமாதானமாக போவதா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 28.02.2026 அன்று, இஸ்ரேலின் அழுத்தங்களால் ஈரான் மீது வழிந்த தாக்குதஸ்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மூண்ட போரின் விளைவாக, ஹோர்முஸ் கடல்வழிப்பாதை மூடப்பட்டமையானது உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பொருளாதார நிலைமைகளிலும் சரிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இரு தரப்பினராலும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையால், சமாதான ஒப்பந்தமேதும் இதுவரை எட்டப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால், புதிய சமாதான ஒப்பந்தம் எட்டப்படும் நிலை தோன்றியிருக்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் எழுந்திருக்கும் அழுத்தங்களின் காரணமாக, ஈரான் விடயத்தில் விரைந்த சமாதான ஒப்பந்தமொன்றை எட்ட வேண்டிய நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரது இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply