போரை நிறுத்த காங்கிரஸ் தீர்மானம்…!

You are currently viewing போரை நிறுத்த காங்கிரஸ் தீர்மானம்…!
ஈரானுக்கெதிரான போரை நிறுத்தி, அமெரிக்கப்படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என் அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த இந்த தீர்மானத்தின் படி, அமெரிக்க ஜனாதிபதி, ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் காங்கிரஸின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் 215–208 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சியுடன் இணைந்து இதற்கு ஆதரவாக வாக்களித்தனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது .
எனினும், இந்த தீர்மானம் சட்டரீதியாக உடனடி நடவடிக்கைகளுக்கு வழி கோலாதெனவும், அதேநேரம் இத்தீர்மானம் ஒரு குறியீடாக மாத்திரமே கருதப்படு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தீர்மானம் செனட் சபையில் முன்வைக்கப்பட்டு அங்கும் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெரும் நிலையில், அமெரிக்க அதிபர் தனக்குரிய “வீட்டோ” அதிகாரத்தை பாவித்து, அதனை தடுக்க முடியும் என்பதே யதார்த்த நிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஈரானுடனான போர் அல்லது ராணுவ மோதல் மேலும் தீவிரமடைவதைப் பற்றிய கவலை காங்கிரஸில் அதிகரித்து வருவதை அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில், போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே உரியது என்றாலும், ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட சூழல்களில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகார வரம்புகள் குறித்து அமெரிக்காவில் நீண்டகாலமாக விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரசில் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் அதிபர் டிரம்ப் இற்கு அரசியல் ரீதியில் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply