போர்க்களமான யாழ் தொழில்நுட்பக் கல்லூரி!

போர்க்களமான யாழ் தொழில்நுட்பக் கல்லூரி!

யாழ்.தொழிநுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் உருவான வாய்த்தா்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறியதில் 3 ஆசிரியா்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடா்பாக மேலும் தெரிய வருவதாவது, தொழில் நுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் தா்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு மாணவா்களும் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவா் வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உதவிக்கு அழைத்துள்ளார். தொழிநுட்ப கல்லூரி சுவரை ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்த ரவுடிகள் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனை அவதானித்த ஆசிரியா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டவா்களை தடுக்க முயன்றபோது, ஆசிரியா்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் 3 ஆசிரியா்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனா்.

இதனையடுத்து வெளியிலிருந்து தாக்குதல் நடாத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை ஆசிரியா்களும், மாணவா்களும் இணைந்து மடக்கி பிடித்திருக்கின்றனா்.

அதனை தொடா்ந்து சுமாா் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்ப கல்லூரிக்குள் நுழைந்து பிடித்து வைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்பதற்கு முயற்சித்துள்ளனா். இதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் ரவுடிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா்.

பின்னா் மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவனையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா். மேற்படி சம்பவத்தையடுத்து தொழில்நுட்ப கல்லூரி சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை காணப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments