போர்க்குற்றங்களுக்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு பொறுப்புக்கூறாது!

போர்க்குற்றங்களுக்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு பொறுப்புக்கூறாது!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்

“இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு போர்க்குற்றங்கள் சம்பந்தமாகப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. எனவே சர்வதேச விசாரணையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது உலகளாவிய உறவுகளான நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு புதிய அரசியல் பிரமுகர் இலங்கையில் ஜனாதிபதியாக பரிணமித்துள்ளார்.

அவரின் தற்போதைய அரசியல் போக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வருங்கால மேம்பட்ட நல்வாழ்வுக்கு எந்தளவுக்கு சாதக பாதகமாக அமையக்கூடும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உங்கள் அனைவருக்கும் எமது பிரச்சினை பற்றி மிகச் சுருக்கமாக ஒரு சில வார்த்தைகள் கூறுவது எமக்கும் உதவும், நீங்களும் தெரிந்து வைத்திருந்தால் எங்கள் சார்பில் உங்களுக்கும் உதவும் என்று நம்புகின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of