போர்க்குற்றவாளிகளுக்கு புதிய இராணுவ பதவியேற்பு!

போர்க்குற்றவாளிகளுக்கு புதிய இராணுவ பதவியேற்பு!

சிறிலங்கா பேரினவாத அரசின் புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா  இராணுவ காவல் துறை படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் அவர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் வசந்த மாதொல , இந்த புதிய நியமனத்திற்கு முன்பு கொஸ்கமயிலுள்ள விணியோக கட்டளத் தளபதியாக பணியாற்றினார்.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அலுவலக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் கள படைப் பிரிவுகள் மற்றும் ஏனைய இராணுவ நிறுவனங்களில் பல கட்டளை, அறிவுறுத்தல் மற்றும் பதவி நிலை நியமனங்களை வகித்துள்ளார்.

அதில் நாரஹேன்பிட்டியவிலுள்ள இராணுவ காவல் துறை  படையணியின் படையணி நிறைவேற்று அதிகாரி,வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரி தரம் 1, கிரித்தலையிலுள்ள இராணுவ பொலிஸ் பாடசாலையின் தளபதி, 1 வது இலங்கை இராணுவ காவல் துறை  படையணியின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு 23 வது படைப் பிரிவின் கேணல்( நிர்வாகம் மற்றும் விடுதி), அலுவலக கட்டளை படை/ வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச பிரதி ஒழுக்காற்று அதிகாரி மற்றும் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பிரிகேடியர்( நிர்வாகம் மற்றும் விடுதிகள்) உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ளார்.

அவர் இராணுவத்தில் அதிகாரி மாணவராக 1986 ஜனவரி 16 ஆம் திகதி இணைந்த்தோடு 1986 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆணைபெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டு இலங்கை இராணுவ காவல் துறை  படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments