போலிச் செய்திகளுக்காக அமெரிக்க ஊடகங்களை குற்றம்சாட்டும் ரஷ்யா!

போலிச் செய்திகளுக்காக அமெரிக்க ஊடகங்களை  குற்றம்சாட்டும் ரஷ்யா!

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், “Britiske Financial Times” மற்றும் அமெரிக்க “New York Times” ஆகியவற்றில், ரஷ்யாவில் கொரோனா நெருக்கடி தொடர்பாக, ரஷ்ய இறப்பு எண்ணிக்கை உண்மையானதல்ல என்று எழுதிய கட்டுரைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இவை போலியான செய்திகள் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் “Maria Zakharova”, YOUTUBE வலைத்தளமான “Solovjov live” ஊடாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், Financial Times மற்றும் New York Times தங்களது அங்கீகாரங்களை இழக்க வேண்டும் என்ற சில ரஷ்ய அரசியல்வாதிகளின் கூற்றுக்களை அவர் நிராகரித்துள்ளார். (ரஷ்யாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்).

ரஷ்யாவில் 240,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2212 பேர் மட்டுமே இறந்துள்ளனர். புள்ளிவிவரங்களை தவறாக கையாண்டுள்ளதாக வந்த குற்றச்சாட்டுகளை துணை பிரதமர் “Tatjana Golikova” முற்றாக மறுத்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments