போலி முகங்களும் தேசியம் பேசுகின்றன!

போலி முகங்களும் தேசியம் பேசுகின்றன!

கடந்த 11 வருடங்களாக தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்தினை நீர்த்துப்போக செய்த சுமந்திரன் போன்றவர்கள் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்கள் ஆனால் சுத்துமாத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக வலிந்து ஆக்கப்பட்டார்.

சரியான பாதையில் செல்லத்தவறிய இவர்கள் கடந்த தேர்தலில் நேர்மையான அரசியலின் மூலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெற்று சிறீலங்கா பாராளுமன்றிலே தமிழ்மக்களின் நீதியை துணிச்சலாக எடுத்துரைத்ததின் விளைவு இன்று போலிகளையும் தமிழ்த்தேசியம் பேச வைத்துள்ளது.

அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் நடந்து முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப்போராட்டத்திலும் தம்மை முன்னிலைப்படுத்த முண்டியடித்து குழப்பத்தை விளைவித்துள்ளார்.

சிவில் அமைப்புகளை பின் தள்ளிவிட்டு தம்மை முன்நிறுத்த முனைந்த சம்பவத்தினால் இப்போராட்டத்தினை அரசியல் கட்சிகளின் சாயம் பூசாது வழிநடத்திய சிவில் அமைப்புகள் சுமத்திரனோடு தர்கப்படும் நிலை ஏற்பட்டது.

அதற்கு இந்த காணொளி சாட்சியாகின்றது.

பகிர்ந்துகொள்ள