மகனின் தாக்குதலால் தந்தை மரணம்!

மகனின் தாக்குதலால் தந்தை மரணம்!

யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார்.

புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார்
அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்

பகிர்ந்துகொள்ள