மகனைத் தேடியலைந்து நீதிகோரி போராடி வந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்!!

மகனைத் தேடியலைந்து நீதிகோரி போராடி வந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்!!

காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து நீதிகோரி போராடி வந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா – மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரைத் தேடி வவுனியாவில் ஆயிரத்து 467 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார். இந்நிலையில், மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments