மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்!

மகனை தேடி அலைந்த  தாயார் ஒருவர் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் முக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த தாயார் ஒருவர் இன்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டம் கொம்மாந்துறை செங்கலடியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சித்திரவேல் அன்னம்மா என்ற தாயாரே இவ்வாறு சுகயீனம் காரணமாக இன்றைய தினம் சாவடைந்துள்ளார்

1994 ம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 26 வருடங்களாக தேடி வந்த தாயாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்

இலங்கை அரச படைகளாலும்,துணை இராணுவக்குழுக்களாலும்,கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட
போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்

எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள