மகனை 10 நாட்களாக காணவில்லை என தந்தை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மகனை 10 நாட்களாக காணவில்லை என தந்தை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த நாகராசா லம்போதரன்(வயது-24) என்பவர் கடந்த 26 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் இன்றுவரை திரும்பி வரவில்லை. குறித்த நபருக்கு தொலைபேசியூடாக அழைப்பெடுக்க முயறன்ற போதிலும் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அவரைப்பற்றிய தொடர்புகள் கிடைக்காததால் மகனைத் தேடிக் கண்டுபிடித்து தருமாறு சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள