மகளை ஆணவக்கொலை செய்த தந்தை – ஈரானில் அதிர்ச்சி சம்பவம்!

மகளை ஆணவக்கொலை செய்த தந்தை – ஈரானில் அதிர்ச்சி சம்பவம்!

ஈரானில் தனது 14 வயது மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது விருப்பத்தை மீறி காதலுடன் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்த மகளையே தந்தை கொலை செய்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரொமினா அஸ்ரவி என்பவரே கௌரவக்கொலை செய்ப்பட்டுள்ளார்.

ரொமினா அஸ்ரவியையும் அவரது காதலரையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர், ரொமினா அஸ்ரவியை தந்தையுடன் செல்லுமாறு கேட்டனர் அவர் தனக்கு அச்சமாக உள்ளது என தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வீடு திரும்பிய அவரை தந்தை கொலை செய்துள்ளார்.

கூரான அரிவாளினால் மகளின் தலையை துண்டித்த தந்தை இரத்தம் தோய்ந்த அரிவாளுடன் வீட்டிலிருந்து வெளியேறி மகளை கொலை செய்ததை ஏற்றுக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு ஈரானின் பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் வழங்கிசெய்தி

வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் இந்த ஆணவக்கொலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ரொமினா ஆணவக்கொலைக்கு பலியான முதல் நபரும் இறுதி நபராகவும் இருக்கப்போவதில்லை என சமூகஊடங்களில் கருத்துவெளியாகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments