மக்களின் கொள்கைகளை அடைய அனைத்து தரப்பும் எமது அரசியல் இயக்கத்துடன் கரம் கோர்க்க வேண்டும்-செ.கஜேந்திரன்!

மக்களின் கொள்கைகளை அடைய அனைத்து தரப்பும் எமது அரசியல் இயக்கத்துடன் கரம் கோர்க்க வேண்டும்-செ.கஜேந்திரன்!

மக்களின் கொள்கைகளை அடைய அனைத்து தரப்பும் எமது அரசியல் இயக்கத்துடன் கரம் கோர்க்க வேண்டும்-செ.கஜேந்திரன்!
யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் 15.08.2020 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வணக்கம் செலுத்தி அரசியல் பயணத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செ.கஜேந்திரன்…தமிழ் தேசம் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்காக போராடிவந்த வேளையில் எங்கள் தரப்பிற்கு கிடைத்துள்ள அங்கிகாரம் என்பது வடகிழக்கு தாயக கோரிக்கையினை மறுதலித்து ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை புதைப்பதற்கு 2009 மே-18 இல் இந்த பேரினவாதம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு விழுந்துள்ள அறையாக நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த இடத்தில் உறுதி எடுத்துள்ளோம் இந்த இலட்சியங்களை அடைவதற்காக நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர்மையாக செயற்படுவோம் என்று.
மக்கள் மீதான  இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுக்கொள்வதற்காக நேர்மையுடன் நாங்கள் உழைப்போம் பொருளாதாரரீதியில் அழிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களை கட்டி எழுப்புவதற்கு எங்கள் அரசயில் இயக்கம் நேர்மையாக செயற்படும் 
தேசியபட்டியலில் பா.உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையினால் கட்சியின் தலைமை அம்பாறை மட்டக்களப்பு வன்னிப்பகுதிகளில் இருக்கின்ற பிரச்சனைகளை கவனம் செலுத்த வேண்டும் என்ற பொறுப்பும் சேர்த்து தரப்பட்டுள்ளது என்னால் முடிந்த வரையில் மக்களின் பிரச்சனையினை எதிர்கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராக இருக்கின்ற அதே நேரம் 

தனி நபராக பாராளுமன்ற உறுப்பினராக செய்கின்ற காரியமல்ல அரசியல் இயக்கமாக மக்கள் அமைப்புக்களின் ஒத்துளைப்புடன் முகம் கொடுக்கவேண்டிய பிரச்சனை என்பதால் இந்த மக்களின் கொள்கைகளை அடைந்து கொள்வதற்காக அனைத்து தரப்புக்களும் எமது அரசியல் இயக்கத்துடன் கரம் கோர்த்து ஒத்துளைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments