மக்களின் வீடுகளை பிடுங்கிய சிறீலங்கா காவல்த்துறை!

மக்களின் வீடுகளை பிடுங்கிய சிறீலங்கா காவல்த்துறை!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து கிராம மக்கள் காவல்த்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் வீடுகளை பிடுங்கிய சிறீலங்கா காவல்த்துறை! 1

கரந்தாயில் தமது காணிகளுக்குள் நுழைந்த சிறீலங்கா காவல்த்துறையினர் தமது உடைமகளை வெளியே வீசி தம்மை வெளியேற்றியதாகத் தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கராந்தாய் கிராமத்தில் மக்கள் வாழ்ந்த காணிகள் அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமானவை என்று தெரிவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

மக்களின் வீடுகளை பிடுங்கிய சிறீலங்கா காவல்த்துறை! 2

இருந்தபோதிலும் மக்கள் மீண்டும் வலிந்து சென்று காணிகளில் குடியமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பொலிஸார் தமக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் ஏ – 09 வீதிப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பெருமளவான வாகனங்கள் வீதியில் தரித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள