மக்களை உசுப்பேத்தும் சுமந்திரன் ஓடி ஒளியக்கூடாது!

You are currently viewing மக்களை உசுப்பேத்தும் சுமந்திரன் ஓடி ஒளியக்கூடாது!

மக்களை அஞ்ச வேண்டாம், நினைவேந்தலை செய்ய முன்வாருங்கள் எனச் சொல்லும் சுமந்திரன் தான் களத்தில் முன்வந்து மக்களுக்கு தைரியமூட்ட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இராணுவத் தளபதியின் மிரட்டலுக்கு மிரட்டலுக்கு அஞ்சாது நினைவேந்தலை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தாக நேற்றைய பத்திரிகையில் செய்தி வெளியாது.இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,சுமந்திரன் மக்களை அஞ்ச வேண்டாம் நினைவேந்தலை செய்ய முன்வாருங்கள் எனச் சொல்லிவிட்டு தான் ஓடி ஒளியக் கூடாது. அவர் முன்வந்து தலைமை ஏற்று நினைவேந்தலை நடத்த வேண்டும்.கொழும்பில் இருந்து கொண்டு இங்கு உள்ள மக்களை அஞ்சக்கூடாது என அறிக்கைகளை  விடுவதை நிறுத்தி களத்தில் இறங்க வேண்டும், என்றார்.

பகிர்ந்துகொள்ள