மட்டக்களப்பில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து இளைஞர் இருவர் பலி!

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து இளைஞர் இருவர் பலி!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலையில் இருந்து மாவடி முன்மாரி பகுதியை நோக்கி மணல் ஏற்றுவதற்காக சென்ற உழவு இயந்திரம், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் 15, 18 வயதான இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள