மட்டக்களப்பில் கஞ்சா வியாபாரி கைது!

மட்டக்களப்பில் கஞ்சா வியாபாரி கைது!

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (24) இரவு காவல்த்துறை விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்றிரவு 8 மணியளவில் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை விசேட புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்ட போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 41 வயதுடைய கஞ்சா வியாபாரியை கைது செய்ததுடன் 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர
இதன்போது கைது செய்யப்பட்டவரை மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள