மட்டக்களப்பில் நான்கு பகுதிகள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு!

You are currently viewing மட்டக்களப்பில் நான்கு பகுதிகள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு,கோறளைப்பற்று மத்தி,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையில் 2இலட்சத்து 78ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதுவரையில் 02இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 58கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8, 525பேர் கொரனாவினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments