மட்டக்களப்பில் மற்றொருவர் கொரோனாவால் மரணம்!

மட்டக்களப்பில் மற்றொருவர் கொரோனாவால் மரணம்!

கொரோனாத் தொற்றுக்கு இலக்காகிய மற்றொருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தின் கொத்தியாபுல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள இரண்டாவது கொரோனா மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள