மட்டக்களப்பில் 136 பேர் உட்பட கிழக்கில் நேற்று 195 பேருக்கு கொரோனா!

You are currently viewing மட்டக்களப்பில் 136 பேர் உட்பட கிழக்கில் நேற்று 195 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் கொரோனா தொற்று நோயாளர் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாவட்டத்தில் 136 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று தொற்று உறுதியான 136 பேருடன் மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 3937 -ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் 40 பேருக்கும் அம்பாறையில் 19 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments