மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா ! 5 பேர் மரணம்!

You are currently viewing மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா ! 5 பேர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை  291  கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது . தொற்றாளர்கள் விபரம் 
மட்டக்களப்பு : 112  
களுவாஞ்சிகுடி : 43  
வாழைச்சேனை : 10  
காத்தான்குடி : 4  
ஓட்டமாவடி : 3  
கோறளைப்பற்று மத்தி : 12  
செங்கலடி : 52 
ஏறாவூர் : 3  
வாகரை : 15  
பட்டிப்பளை : 1  
வவுணதீவு : 9  
வெல்லாவெளி : 2  
ஆரையம்பதி : 20  
கிராண் : 3  

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை, இருந்தும் தொற்று முறையினையும் மரண எண்ணிகையினையும் பார்க்கும் போது டெல்டா வேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். கோறளைப்பற்று மத்தி, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் மரணங்கள் இடம்பெற்றுள்ளன..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாவது அலையில் 143 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 20 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் மரணமடையவில்லை. 20 – 50 வயதுக்குட்பட்டவர்கள் 15 பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேரும் உயிரிழந்துள்ளனர். அதில் மரணமடைந்தவர்களில் 54 வீதமானவர்கள் ஆண்கள் ஆவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 651 கட்டில்கள் இடைத்தங்கள் முகாம்களில் தயார் நிலையில் உள்ளன.. சிகிச்சை நிலையங்களில் 116 கட்டில்கள் தயார் நிலையில் உண்டு.. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 124 கட்டில்கள் உள்ளன. தற்போது ஒட்சிசன் தட்டுப்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. அவசர சிகிச்சை பிரிவு வசதிகளை பொறுத்தவரையில் காத்தான்குடி வைத்தியசாலையில் 06 கட்டில்களும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் 14 கட்டில்களுடன் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்..

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் சிறுசிறு கொத்தணிகள் உருவாகுவதற்கு ஒன்று கூடல்களே காரணமாகயிருந்தன. மரண வீடுகள், கோவில்களுக்கு சென்று வந்தவர்கள், திருமண வீடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிருங்கள். ஒன்று கூடுவதை முற்றாக தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும். தேவையிருந்தால் மட்டுமே வீட்டினை விட்டு வெளியில் செல்லுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூகபொறுப்புடன் செயற்படவேண்டும்.. தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளவர்கள் வீட்டினை விட்டு வெளியில் வரவேண்டாம். அவ்வாறு யாரும் வெளியில் வந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்தும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணியை பூர்த்திசெய்ய முடியும். என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments