மட்டுப்படுத்தப்படும் ஒஸ்லோவின் பொதுப்போக்குவரத்துக்கள்!

You are currently viewing மட்டுப்படுத்தப்படும் ஒஸ்லோவின் பொதுப்போக்குவரத்துக்கள்!

“கொரோனா” பரவலினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால், நோர்வேயின் தலைநகர், ஒஸ்லோவின் பொதுப்போக்குவரத்துக்கள் கணிசமாக குறைக்கப்படவுள்ளன.

தலைநகருக்கும் ஏனைய இடங்களுக்குமான தொடரூந்து சேவைகள், பேரூந்து சேவைகள் உட்பட, தலைநகரத்தின் சுரங்கத்தொடரூந்துகள், மின் இழுவை தொடர்வண்டிகள் மற்றும் தலைநகரத்தை அண்டியுள்ள சிறுசிறு தீவுகளுக்கான பயணிகள் கப்பல் சேவைகள் அனைத்தும் கணிசமாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடரூந்து நிலையங்கள் அனைத்திலும் முக்கியமான பகுதிகளும், இடங்களும் “கொரோனா” பரவலை தடுக்கும் நோக்கோடு விசேட முறையில் சுத்திகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணைக்கு: www.ruter.no, www.vy.no

பகிர்ந்துகொள்ள