மட்டு பல்கலைக்கழக முகாமில் மேலும் 13 பேருக்கு கொரோனா!

மட்டு பல்கலைக்கழக முகாமில் மேலும் 13 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்புமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் புதன்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கொரோன தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்ததையடுத்து இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது

இந்த நிலையில் குறித்த தடுப்பு முகாமில் 32 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கடந்த திங்கட்கிழமை (20) காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 13 பேருக்கு தோற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை புதன்கிழமை அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 3 தினங்களில் 45 தொற்று நோயாளர்கள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள