மட்டு. மாவட்டத்தில் இன்று நால்வரை பலியெடுத்தது கொரோனா! 96 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing மட்டு. மாவட்டத்தில் இன்று நால்வரை பலியெடுத்தது கொரோனா! 96 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 96 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் என நால்வர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் நாளை பிரசவத்திற்காகத் தயாராகியிருந்த நிறைமாத கர்ப்பவதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று தொற்றுக்குள்ளானவர்கள் விபரம் வருமாறு,

மட்டக்களப்பில் 14 பேர்,

களுவாஞ்சிக்குடியில் 09 பேர்,

காத்தான்குடியில் 18 பேர்,

ஓட்டமாவடியில் 16 பேர்,

கோரளைப்பற்று மத்தியில் 10 பேர்,

செங்கலடியில் 03 பேர்,

ஏறாவூரில் ஒருவர்,

பட்டிப்பளையில் 07 பேர்,

வவுணதீவில் 10 பேர்,

வெல்லாவெளியில் 02 பேர்,

கிரானில் 06 பேர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments