மணல் ஏற்ற உள்ளுர் ஊர்திகாரர்களுக்கு அனுமதி மறுப்பு கவனயீர்ப்பு!

மணல் ஏற்ற உள்ளுர் ஊர்திகாரர்களுக்கு அனுமதி மறுப்பு  கவனயீர்ப்பு!

வடமராட்சி கிழக்கு – மணற்காட்டு பகுதியில், மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களால், இன்று (17) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மணற்காட்டுப் பகுதியில், உள்ளூர் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 40க்கும் மேற்பட்ட பாரவூர்திகளுக்கு திடீரென மணல் அகழ்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், பாரவூர்தி சங்கத்தின் சில வாகனங்களுக்கு, அரசியல் கட்சி சார்பாக மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments