மணியின் கைதுக்கு மனோ கடும் கண்டனம்!

மணியின் கைதுக்கு மனோ கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமையைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடுமையாகக் கண்டிக்கின்றது என அந்தக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மணிவண்ணனின் கைதுக்குப் பதில் அவர் மீது குற்றஞ்சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் எடுத்து, நிதானமாக நடந்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கைதைக் கண்டித்து, ராஜபக்ச அரசைக் கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தமது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகின்றேன்.

இந்தக் கைது அரசை மட்டுமல்ல, நம்மவர்களையும் திருப்தியடையச் செய்திருக்கின்றது என நான் அறிகின்றேன். கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாகக் கூறுகின்றேன்” – என்றார்.

பகிர்ந்துகொள்ள